வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

அகமுடையார் மோசம்போன  வரலாறு தெரியுமா? 

தினமணி நாளிதழில் 30 ஆண்டுகள் நிருபராக பணியாற்றிய நான், ராமநாதபுரம் சேர்வாருங்க..மண்டபம் விஸ்வநாதன் என்று எனக்கு பெயர் வைத்தது தினமணியின் தலைமகன் மதிப்புமிகு  ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்கள்தான்.
மானன்னர் மருதுபாண்டியர் தினத்தில் கூடிக் கலைவதால், அதிமுகவில் உள்ள அகம்படியங்களுக்கு "அம்மா" சீட் தருவதில்லை. முக்குலத்தில் உள்ள கள்ளர், மறவர்  நமக்கு உள்ளதையும் தட்டிச் சென்றுவிடுகிறார்கள் என்பது நமது இனத்தின் ஆதங்கம். நம் இனைத்தை முக்கியத்துவப்படுத்த, அம்மாவிடம் எடுத்துச் சொல்ல அங்கே யாருமில்லை.
கும்பகோணம் சங்கம் கூட்டம் நடத்தி சாதித்து என்ன?. இப்போது தஞ்சை சங்கம் கூட்டம் நடத்தத் தயாராகிறது :  வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.
ஆனால், ராமதாஸ்,சீமான் பின்னால் நம்ம இளைஞர்களை திருப்பிவிட்டு ஆதாயம் தேடுவோரை அடையாளம் கண்டு கொள்ளுங்க....அவங்களும் நல்லவங்கதான். பேசி ஒருங்கிணைத்தால் 
அவர்களால் நம்மினத்திற்கு ப(ய)லன் உண்டு என்பதை மறுக்க இயலாது. 
ஏன்னா, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்  பிரபாகரன், பிளாட் தலைவர்  உமாமகேஸ்வரன், EPRLF பத்மநாபா, ஈரோஸ் பாலகுமார் எல்லாரும் எனக்கு 1980 முதல்  நண்பர்கள். அவர்களிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால், விட்டுக் கொடுக்கும் தன்மை அருகியதால்தான்  இலங்கையில் தமிழினம் வீழ்த்தப்பட்டது.                

அகமுடையார் என்றால் அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள். எதிரிகளை படிய வைக்கும் திறனை அகத்தில் கொண்டவர் என்றுமற்றொரு பொருளும் உண்டு. பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருள். 

அந்த காலத்தில் மன்னருக்கு, அரசுக்கு,  அமைச்சரவை சார்ந்த அனைத்துவிதமான சேவை செய்தவர்களை சேர்வைக்காரர்.  மாமன்னர் மருது பாண்டியர்களின் வழிவந்த அகமுடையார் குலத்தினர், ”ராஜகுல அகமுடையார்” . தமிழக வரலாற்று ஆவணங்களில்,  முற்கால சோழர்கள் அகமுடையார் குலத்தை சார்ந்தவர்கள் என்றும்  கல்லணையை கட்டிய கரிகால சோழனும் ”இரும்புத்தலை அகமுடையார்” குல பிரிவை சார்ந்தவரே. 

அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். முதலியார் என்பதும் போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று  பொருள் தருகிறது.  ஆனால் இப்போது நடக்கும் அம்மாவின் ஆட்சியில் நமது இனத்தவருக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதை கிடைக்கச் செய்தால், நம்மினத்திற்கு நிச்சயமாக பலன் உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திப்போம்.
காசு , பணம் வைத்திருக்கும்  நம்ம டி.ஆர்.பாலு போன்றவர்களுக்கு நம்ம ஜாதி சங்கம் வாக்கு சேகரிக்கிற வேலை பார்த்தா போதாது: அதுவும் இல்லாத நம்ம ஆளுக்கு அடுத்த தேர்தலில் வேலை பாருங்க..அப்போதுதான் நம்மை 
அம்மா மட்டுமல்ல, மற்ற கட்சிகளும் மதிப்பாங்க. இன்னும் வரும்.....
குறிப்பு: தனிப்பட்ட எவரையும் புண்படுத்துவது எமது இயல்பு அல்ல: எப்படியாவது ஒன்றாக கூடிவிடமாட்டோமா, அரசியலில், ஆட்சியில்  அந்தஸ்த்து பெற்றுவிடமாட்டோமா  என்ற உயர்ந்த நோக்கத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.